Interaction
நத்திங் நிறுவனம் இந்தியாவில் நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் வரும் மார்ச் 5-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நத்திங் போன் 2ஏ போனின் அறிமுக தேதியை பிளிப்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளது.
டூயல் ரியர் கேமரா, பஞ்ச்-ஹோல் நாட்ச் டிஸ்பிளே, கிளிஃப் லைட்டிங் லேஅவுட் (Glyph lighting layout) போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நத்திங் போன் 2ஏ போன். அதேபோல் மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்புடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
Prosser 📱
நத்திங் போன் 2ஏ அம்சங்கள் (Nothing Phone 2A specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் ( MediaTek Dimensity 7200 SoC) வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
STORAGE and RAM
ஜிபி ரேம் + 28ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த நத்திங் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.50எம்பி Samsung ISOCELL S5KGN9 பிரைமரி கேமரா + 50எம்பி ISOCELL JN1 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
Camera 📸
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். 4290எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த போன். எனவே இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
Display
நத்திங் போன் 2ஏ மாடல் 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே ( AMOLED display) வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
Speaker 🔊
டால்பி ஆடியோ வசதி உடன் நத்திங் போன் 2ஏ மாடல் அறிமுகமாகும். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். அதேபோல் இந்தியாவில் நத்திங் போன் 2ஏ மாடல் ரூ.35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Book Mark Present
THANK FOR SEEING THIS PAGE 📃 MEET NEXT TIME 🙂 BY FRENDS 😞