Jio Freedom Offer Free Rs 3599 Mobile Plan: முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான டெலிகாம் ஆபரேட்டர் ஆன ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, தனது ஃப்ரீடம் ஆபரை (Freedom Offer) இன்னும் சில நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்த கையோடு, தனது ஃப்ரீடம் ஆபரின் கீழ் முற்றிலும் புதிய இலவச சலுகை (Free Offer) ஒன்றையும் அறிவித்து உள்ளது. அதென்ன சலுகை? ஜியோவின் இந்த புதிய ஃப்ரீடம் ஆபரை அணுக விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ஃப்ரீடம் ஆபர் என்பது ஒரு விளம்பர சலுகை (Promotional offer) ஆகும். இந்த சலுகை, ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் புதிய கனெக்ஷனை (New Jio AirFiber connection) பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்; மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.
முன்னதாக - அதாவது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட - இதே ஃப்ரீடம் ஆஃபரின் கீழ், ஏர்ஃபைபர் சேவையின் கீழ் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30% தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய ஜியோ ஏர்ஃபைபர் கனெக்ஷனை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,599 மதிப்புள்ள வருடாந்திர மொபைல் திட்டம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி, புதிய ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,599 வருடாந்திர மொபைல் திட்டம் இலவசமாக கிடைக்கும். புதிய ஏர்ஃபைபர் இணைப்பைப் பெற, பயனர்கள் தங்கள் விவரங்களை உள்ளிட்டு, ரீபண்டபிள் புக்கிங் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
போனஸாக, முன்பதிவு கட்டணத்தை ஈடுகட்ட ரூ.50 மதிப்புள்ள இலவச டேட்டா பேக்கையும் ஜியோ வழங்கும். சுவாரசியமாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 30% தள்ளுபடியும் கிடைக்கும். இதன்கீழ் 30% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.2,121 என்கிற விலைக்கு 3 மாத திட்டம் அணுக கிடைக்கும். கூடவே ரூ.1,000 மதிப்புள்ள இலவச இன்ஸ்ட்டாலேஷனும் கிடைக்கும்.
இலவசமாக கிடைக்கும் ரூ.3,599 மொபைல் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஜியோவின் ரூ.3,599 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ், டெய்லி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகள் 365 நாட்களுக்கு அல்லது 1 ஆண்டுக்கு கிடைக்கும். கூடுதலாக ரூ.3599-ன் கீழ் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரும் கிடைக்கும்.
புதிய ஜியோ ஏர்ஃபைபர் கனெக்ஷனின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஜியோ ஏர்ஃபைபர் என்பது 800+ டிஜிட்டல் டிவி சேனல்கள், 15+ ஓடிடி தளங்கள் மற்றும் 1 ஜிபிபிஎஸ் வைஃபை கொண்ட ஆல் இன் ஒன் சொல்யூஷன் ஆகும். இதன் கீழ் தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி போன்ற 14+ பிராந்திய மொழிகளில், அனைத்து வகைகளிலும் 800+ டிஜிட்டல் டிவி சேனல்கள் அணுக கிடைக்கும். கூடவே நெட்பிளிக்ஸ், ஜியோ சினிமா, சோனி லைவ், ஜீ5, சன் நெக்ஸ்ட், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உட்பட 17 பிரபலமான ஓடிடி பலன்களும் கிடைக்கும்.
சில தினங்களுக்கு முன்பாக ஜியோ நிறுவனம், ஸ்மார்ட் டிவிகளுக்கான ஜியோ டிவி பிளஸ் ஆப்பை (Jio TV Plus App) அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்ப்போது இந்த ஆப் அனைத்து முன்னணி ஸ்மார்ட் டிவிகளிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. ஜியோ டிவி பிளஸ் ஆப்பில் உள்ள கன்டென்ட் டை அணுக எஸ்டிபி (STB) எதுவும் தேவையில்லை. ஏனென்றால்.. ஜியோ டிவி பிளஸ் ஆப் என்பது ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் ஒரு கூடுதல் சேவையாகும்.
ஜியோ டிவி பிளஸ் ஆப்பின் கீழ் 800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் டிவி சேனல்கள் அணுக கிடைக்கும். பொழுதுபோக்கு பிரிவில் - கலர்ஸ் டிவி, ஈடிவி, சோனி எஸ்ஏபி, ஸ்டார் பிளஸ், ஜீ டிவி. நியூஸ் பிரிவில் - ஆஜ் தக், இந்தியா டிவி, டிவி9 பாரத்வர்ஷ், ஏபிபி நியூஸ், நியூஸ்18. ஸ்போர்ட்ஸ் பிரிவில் - சோனி டென், ஸ்போர்ட்ஸ்18, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், யூரோஸ்போர்ட், டிடி ஸ்போர்ட்ஸ்.
ம்யூசிக் பிரிவில் - B4U இசை, 9XM, MTV, ஜூம். கிட்ஸ் பிரிவில் - போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், நிக் ஜூனியர், டிஸ்கவரி கிட்ஸ். பிஸ்னஸ் பிரிவில் - ஜீ பிஸ்னஸ், CNBC TV18, ET Now, CNBC ஆவாஸ். டிவோஷனல் பிரிவில் - ஆஸ்தா, பக்தி டிவி, பிடிசி சிம்ரன், சன்ஸ்கார் உட்பட 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் அணுக கிடைக்கும்.ஜியோ டிவி பிளஸ் ஆப் நன்மைகள் ஆனது ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) சேவையின் கீழ் கிடைக்கும் அனைத்து திட்டங்களும், ஜியோஃபைபர் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் உள்ள ரூ. 599, ரூ. 899 மற்றும் அதற்கு மேலான திட்டங்களிலும் மற்றும் ஜியோஃபைபர் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் உள்ள ரூ 999 மற்றும் அதற்கு மேலான திட்டங்களிலும் அணுக கிடைக்கும்.