Question 1: "தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!" என்ற பாடலின் ஆசிரியர் ?
A) தொல்காப்பியர்
B) பாரதிதாசன்
C) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
D) பாரதியார்
Explanation: பாரதிதாசன்.
Question 2: தமிழின் முதல் காப்பியம்?
A) சிலப்பதிகாரம்
B) அகநானூறு
C) தொல்காப்பியம்
D) நாலடியார்
Explanation: சிலப்பதிகாரம்
Question 3: இளங்கோவடிகளின் காலம்?
A) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
B) கி.பி. நான்காம் நூற்றாண்டு
C) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
D) கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
Explanation: A. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
Question 4: சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார்
கூற்று 2: சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல். அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை)
கூற்று 3: இனிப்பு அல்லாத காய் பாகற்காய் = பாகு + அல் + காய்
கூற்று 4: இயல் தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும் ; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்
A) அனைத்தும் சரி
B) அனைத்தும் தவறு
C) கூற்று 1 2 சரி , கூற்று 3, 4 தவறு
D) கூற்று 1 4 சரி, கூற்று 2 3 தவறு
Explanation: அனைத்தும் சரி
Question 5: பொருத்துக :
1. கமுகு (பாக்கு) -- கூந்தல்
2. சப்பாத்திக்கள்ளி --- மடல்
3. பலா --- இலை
4. நாணல் --- தோகை
5. கோரை --- புல்
A) 5 4 3 2 1
B) 4 2 1 3 5
C) 1 2 3 4 5
D) 3 1 5 2 4
Explanation: ) 1 2 3 4 5.
Question 6: தானியங்கிகளுக்கும், எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு?
A) நூலறிவு
B) செயற்கை நுண்ணறிவு
C) கணினி
D) சிற்றறிவு
Explanation: செயற்கை நுண்ணறிவு.
Question 7: கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?
A) திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்
B) திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. "திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது
C) திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறைவாழ்த்து முதலிய பல சிறப்பு பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
D) திருக்குறள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்று
Explanation: திருக்குறள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்று.
Question 8: பின்வருவனவற்றில் உயிர்மெய் எழுத்துகள் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1: மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன
கூற்று 2: உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்
கூற்று 3: வரிவடிவம் உயிர் எழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு மெய்யெழுத்தை ஒத்திருக்கும்
கூற்று 4: முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்
A) அனைத்தும் சரி
B) அனைத்தும் தவறு
C) கூற்று 1 2 சரி, கூற்று 3 4 தவறு
D) கூற்று 1 2 4 சரி, கூற்று 3 தவறு
Explanation: கூற்று 1 2 4 சரி, கூற்று 3 தவறு.
Question 9: பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக -------- இருக்கின்றன?
A) சார்பு எழுத்துகள்
B) ஆயுத எழுத்துக்கள்
C) முதல் எழுத்துகள்
D) நெடில் எழுத்துக்கள்
Explanation: முதல் எழுத்துகள்.
Question 10: தவறானதைத் தேர்ந்தெடு?
A) பறவைகள் பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி எனப்படும்
B) மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது! என்கிறார் பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி
C) சலீம் அலி தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றை படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார்.
D) சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்ச்சி நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்
Explanation: சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்ச்சி நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
Question 11: பொருத்துக
1. க்,ச்,ட்,த்,ப்,ற் --- ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன
2. ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் --- ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன
3. ய்,ர்,ல்,வ்,ழ்,ள் --- ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன
A) 1 2 3
B) 3 2 1
C) 2 1 3
D) 3 1 2
Explanation: 3 1 2.
Question 12: வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி - எனப் பாடியவர்?
A) அறிவுமதி
B) வாணிதாசன்
C) காசி ஆனந்தன்
D) நெல்லை சு.முத்து
Explanation: வாணிதாசன்.
Question 13: செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
A) செம்மை + பயிர்
B) செம் + பயிர்
C) செமை + பயிர்
D) செம்பு + பயிர்
Explanation: செம்மை + பயிர்.
Question 14: கடல் நீர் ஆவியாகி மேகமாகும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். என்று பழந்தமிழ் இலக்கியங்களான ---------- நூல்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு?
A) முல்லைப்பாட்டு
B) திருப்பாவை
C) பதிற்றுப்பத்து
D) பரிபாடல்
Explanation: பதிற்றுப்பத்து.
Question 15: திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி - என யாருடைய பாடலில் கூறப்பட்டுள்ளது?
A) திருவள்ளுவர்
B) ஔவையார்
C) தொல்காப்பியர்
D) கபிலர்
Explanation: ஔவையார்.
Question 16: பொருத்துக
A. கோடை --- திருக்குறள் --- 554
B. அரசு --- அகநானூறு --- 42
C. புகழ் --- குறுந்தொகை --- 72
D. செய் --- தொல்காப்பியம், வேற்றுமையியல் --- 71
A) 4 3 2 1
B) 1 2 3 4
C) 2 1 4 3
D) 3 4 1 2
Explanation: 2 1 4 3.
Question 17: "நாராய்,நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியவர்?
A) சலீம் அலி
B) காசி ஆனந்தன்
C) சத்திமுத்தப் புலவர்
D) அறிவுமதி
Explanation: சத்திமுத்தப் புலவர்.
Question 18: ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர்?
A) திருவள்ளுவர்
B) தொல்காப்பியர்
C) ஔவையார்
D) இளங்கோவடிகள்
Explanation: தொல்காப்பியர்.
Question 19: ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் - என்று இயற்கையைப் போற்றும் நூல்?
A) தொல்காப்பியம்
B) நாலடியார்
C) சிலப்பதிகாரம்
D) மணிமேகலை
Explanation: சிலப்பதிகாரம்.
Question 20: மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் -------
A) அடுக்குகள்
B) கூரை
C) சாளரம்
D) வாயில்
Explanation: அடுக்குகள்.
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%